×

விவசாயிகள் போராட்டத்தின் போது மிரட்டல் வந்தது!: இந்திய அரசு மீது டுவிட்டர் மாஜி சிஇஓ குற்றச்சாட்டு

வாஷிங்டன்: விவசாயிகள் போராட்டத்தின் போது எங்களுக்கு மிரட்டல்கள் வந்தன என்று இந்திய அரசு மீது டுவிட்டர் மாஜி சிஇஓ ஜாக் டோர்சி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ‘கிறிஸ்டல் மற்றும் சாகர் வித் பிரேக்கிங் பாயிண்ட்ஸ்’ என்ற யூடியூப் ஷோவில், டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜாக் டோர்சி பேசுகையில், ‘இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்ற போது அதனை சுற்றி பல்வேறு விஷயங்கள் நடந்தது. அந்த கட்டத்தில் ஒன்றிய அரசை விமர்சிக்கும் சில நபர்கள் குறித்தும் சில குறிப்பிட்ட பத்திரிகைகள் குறித்தும் எங்களுக்கு பல்வேறு கோரிக்கைகள் வந்தன.

அவர்கள் (ஒன்றிய அரசு) சொன்னபடி செய்யாவிட்டால் இந்தியாவில் உள்ள டுவிட்டர் ஊழியர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படும் எனக் கூறினார். சொன்னபடியே செய்தார்கள். இத்துடன் டுவிட்டர் அலுவலகங்களே மூடப்படும் என்று மிரட்டல்கள் வந்தன. இதெல்லாம் நடந்தது இந்தியா என்னும் ஜனநாயக நாட்டில்’ என்றார். இவரது இந்த பேச்சு, இந்திய அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. இதற்கு ஒன்றிய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அளித்துள்ள பதிலடி பதிவில், ‘ஜாக் டோர்சியின் கருத்துகள் முற்றிலும் பொய்யானது.

அவரது பதவி காலத்தில் இந்தியாவின் இறையாண்மை சட்டங்கள் மீறப்பட்டன. இந்திய சட்டங்களுக்கு ஏற்பட அவர் நடந்து கொள்ளவில்லை. இந்திய டுவிட்டர் அலுவலகத்தில் பணியாற்றிய யாரும் சிறைக்குச் செல்லவில்லை. டுவிட்டர் அலுவலகமும் மூடப்படவில்லை. இறையாண்மைமிக்க இந்தியாவில், அதன் சட்டங்கள் பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்யும் உரிமை உண்டு’ என்று தெரிவித்துள்ளார்.

The post விவசாயிகள் போராட்டத்தின் போது மிரட்டல் வந்தது!: இந்திய அரசு மீது டுவிட்டர் மாஜி சிஇஓ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Twitter ,Maji ,CEO ,Indian Govt. ,Washington ,Jack ,Indian Govt ,Maji CEO ,Government of India ,
× RELATED இளையராஜாவை மறைமுகமாக தாக்கினாரா...